“இனவரம்பில்லாமல் உதவ வேண்டும்”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்
இனவரம்பில்லாமல் உதவ வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
இனவரம்பில்லாமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழக முதல்-அமைச்சரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்-அமைச்சரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம்" என்று அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும்
— Mano Ganesan (@ManoGanesan) April 10, 2022
நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் @mkstalin சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம். @CMOTamilNadupic.twitter.com/sWUWf4Mkvj
Related Tags :
Next Story