"வேலைவாய்ப்பின்மையால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை" - அன்புமணி ராமதாஸ்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 10 April 2022 6:32 PM IST (Updated: 10 April 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பின்மையால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விருதுநகர்,

வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியற்று காணப்படுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

சிவகாசியில் விருதுநகர் மாவட்ட பாமக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே முதலில் குரல் கொடுப்பது நாங்கள் தான். தென் மாவட்டங்கள் என்று சொன்னாலே அது ஒரு மிகப்பெரிய குறை வளர்ச்சியடையாத பகுதி. 

தொழில் வளங்கள் இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் தான் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை. பல பகுதிகளில் பிரச்சனைகள்,  சண்டைகள், சர்ச்சைகள், கலவரங்கள் நடக்கின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story