விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா: பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம்...!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
கேகே நகர்,
திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். காலை 8.20 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி வந்த இன்டிகோ விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் சுமார் 60 தொண்டர்கள் காத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சசிகலா கார் மூலம் உத்தமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார்
Related Tags :
Next Story