தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும் - செங்கோட்டையன்

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும் என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழகத்தை ஆள முடியாது என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story