இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது - அண்ணாமலை


இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது - அண்ணாமலை
x
தினத்தந்தி 12 April 2022 3:38 PM IST (Updated: 12 April 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நான் இந்தி பேச மாட்டேன்; உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்று கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்து கொண்டுதான் உள்ளது.

2வது தேசிய கல்வி கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையில் இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம்.

கடந்த 2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது சி.யு.சி.ஈ.டி(CUCET) தேர்வு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை, திமுக அரசு எப்படி குறை சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story