உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி பழனிசாமி

உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 12 April 2022 8:43 PM IST (Updated: 12 April 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது காரை மறந்து, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது காரை மறந்து, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தனது காரில் ஏறுவதற்கு பதிலாக, அங்கு தயாராக நின்றிருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறுவதற்கு சென்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினின் கார் என கூறிய நிலையில், உடனடியாக சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் தனது காரில் ஏறிச்சென்றார். 

Next Story