பாண்டியன், வைகை, பொதிகை ரெயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றம் - தெற்கு ரெயில்வே தகவல்
பாண்டியன், வைகை, பொதிகை ரெயில்கள் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை, பாண்டியன் விரைவு ரெயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரெயில் ஆகியவற்றின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 14 முதல் மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில் இரவு 9.30-க்கு புறப்படுவதற்கு பதில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னை-செங்கோட்டை பொதிகை விரைவு ரெயில் ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story