தமிழகத்தில் காவல்-தீயணைப்பு துறைக்கு ரூ.66 கோடியில் புதிய கட்டிடங்கள்
தமிழகத்தில் காவல்-தீயணைப்பு துறைக்கு ரூ.66 கோடியில் புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் சிதம்பரம், கோவை மாவட்டம் கோவைபுதூர், திருப்பூர் மாவட்டம் மங்களம், சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.37 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, சென்னை பேசின் பிரிட்ஜ், அயனாவரம், பழவந்தாங்கல் மற்றும் அம்பத்தூர் (அனைத்து மகளிர் காவல் நிலையம்) திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரி, மகாராஜா நகர் மற்றும் விக்கிரமசிங்கபுரம், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், காஞ்சீபுரம் மாவட்டம் சிவகாஞ்சி, கன்னியாகுமரி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் ரூ.12 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 காவல் நிலைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
ரூ.66 கோடியில் கட்டிடங்கள்
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் என ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல்துறை கட்டிடங்கள்,
கோவை மாவட்டம் காந்திபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள், கோவை மத்திய சிறை வளாகத்தில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சேலம் மாவட்டம் சங்ககிரி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சென்னை சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.9 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான 58 குடியிருப்புகள், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் என மொத்தம் ரூ.66 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
வீரவணக்க நினைவு சின்னம்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்த அதிகாரிகள்-பணியாளர்கள் நினைவாக சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குனரக வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் சுனில் குமார் சிங், தீயணைப்பு-மீட்புப்பணிகள் துறை இயக்குனர் பிராஜ் கிஷோர் ரவி, காவலர் வீட்டுவசதி கழக தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story