போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் சிறை


போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் சிறை
x
தினத்தந்தி 13 April 2022 9:43 AM GMT (Updated: 2022-04-13T15:13:27+05:30)

சிவசங்கர் பாபாவை வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6 வழக்குகள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திலும், 2 வழக்குகள் கூடுதல் மகிளா அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சிவசங்கர் பாபா இன்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். 

Next Story