உலக பொது மொழியை உருவாக்க ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்
உலக பொது மொழியை உருவாக்க ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் - குமரி அனந்தன் வலியுறுத்தல்.
சென்னை,
தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகத்தில் 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட தாய் மொழிகள் உள்ளன. உலக மக்களை உறவினர்களாக கருதி அவர்களோடு உரையாட 7 ஆயிரத்து 200 மொழிகளை ஒருவர் வாழ்நாளில் படிக்கவே முடியாது.
எனவே, உலக மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள ஒரு பொது மொழி வேண்டும் என்று சோபனர் என்பவர் எஸ்பெராண்டோ என்ற ஒரு மொழியை உருவாக்கினார்.
ஆனால், அது ஐரோப்பா கண்டத்தில் உள்ள மொழிகளின் வேர்ச்சொற்களின் அடிப்படையில் மட்டும் உருவாக்கப்பட்டதால் உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, உலக செம்மொழிகளின் வேர்ச்சொற்களை கொண்டு ஒரு பொதுமொழி உருவாக்க வேண்டும் என்று 1992-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் பதில் அனுப்பியதில், ஐ.நா.சபையின் பொதுக்குழு கூட்டத்தில் ஒரு உறுப்பு நாடு வரைவு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் உலக பொதுமொழி காணும் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவித்து இருந்தார்கள்.
எனவே, 1992 முதல் இன்று வரை உள்ள பிரதமர்களுக்கு ஐ.நா.சபை கடிதத்தை இணைத்து, வேண்டுகோள் கடிதத்தையும் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன். ஐ.நா.வின் உறுப்பு நாடான இந்தியா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுத்தால் தாய் மொழிகளும் வாழும், உலக பொதுமொழியும் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story