கவர்னருடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு ! என்ன காரணம்...!
சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் திடீர் என சந்தித்து பேசினர்.
சென்னை
சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவி உடன் தமிழக அமைச்சர்கள் தற்போது திடீரென சந்தித்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் சந்தித்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். கவர்னர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி ஆகியவை பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்துள்ளனர்.
கவர்னர் தேநீர் விருந்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு தொடங்கி பல்வேறு மசோதாக்கள் கவர்னர் வசம் உள்ள நிலையில், கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story