சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தேரோட்டம்...!


சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தேரோட்டம்...!
x
தினத்தந்தி 15 April 2022 3:30 PM IST (Updated: 15 April 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. 

இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாள்கள் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெறவில்லை. 

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப். 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தனி,தனி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இதனை தொடர்ந்து காலை 9.35 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

பாதுகாப்பு பணியை நூற்றுக்கணக்கான போலீசார் மேற்கொண்டு வந்தனர். சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story