"இலங்கைத் தமிழர்கள் என்றும் நம் உறவுகளே" - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களைவோம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன்.
தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற தமிழுணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம்!
நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைவோம்! தேவைகளைக் கேட்டறிந்து தீர்ப்போம்! மனிதம்தான் நமது அடிப்படை!' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story