நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற நடைபெற்ற யாகம்...!


நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற நடைபெற்ற யாகம்...!
x
தினத்தந்தி 16 April 2022 7:15 AM GMT (Updated: 2022-04-16T12:45:50+05:30)

உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற சிறப்பு யாகம் நடைபெற்றது.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு,  நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. 

அப்போது  பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story