மின்வெட்டு இல்லாத முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி


மின்வெட்டு இல்லாத முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 16 April 2022 10:23 PM IST (Updated: 16 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரு லட்சம் வேளாண் மின் இணைப்பை பெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

2021-ம் ஆண்டு நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருந்த போது பொறுப்பை ஏற்ற முதல்-அமைச்சர், மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நினைவில் வைத்து, எங்களை அழைத்தார். ஒருவர் நிதி நெருக்கடி என்று சொன்னார். ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பா? சாத்தியம் இல்லை என்றார், மற்றொருவர். உறுதி அளித்து இருக்கிறோம். நிறைவேற்றுங்கள். நான் இருக்கிறேன் என்று சொன்னார், முதல்-அமைச்சர். அவருடைய உத்தரவால், மின்வாரியத்தின் வரலாற்றில் இல்லாத சாதனையை நாம் இப்போது செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த உற்பத்தியான அனல்மின் நிலையத்தில் இருந்து 2020-21-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 553 மில்லியன் யூனிட் உற்பத்தியாக இருந்தது. முதல்-அமைச்சரின் நடவடிக்கையால், 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 391 மில்லியன் யூனிட்டாக உற்பத்தி அதிகரித்துள்ளது. இது 31 சதவீதம் உற்பத்தி திறன் அதிகம். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில இடங்களுக்கு மின்வெட்டுகள் செய்யப்பட்டு இருந்தாலும், முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்வெட்டே இல்லாத, சீரான மின்வினியோகம் வழங்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story