மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத்தை உயர்த்த வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்


மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத்தை உயர்த்த வேண்டும் - கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 April 2022 10:35 PM IST (Updated: 16 April 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 61 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடல் விசைப்படகுகள், மோட்டார் பொறுத்தப்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடற்கரையோரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவர்கள் நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Next Story