மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி? - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி,
மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அவர் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story