பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களுடன் சமபந்தி விருந்து


பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களுடன் சமபந்தி விருந்து
x
தினத்தந்தி 19 April 2022 12:32 AM IST (Updated: 19 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களுடன் சமபந்தி விருந்து அண்ணாமலை பங்கேற்பு.

பூந்தமல்லி,

பா.ஜ.க. சார்பில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் பெண் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்ததுடன், அவர்களுக்கு சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தூய்மை இந்தியா திட்ட மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

ஏப்ரல் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சமூகநீதி நாட்களாக, சமூக நீதி வாரங்களாக இந்தியா முழுவதும் பா.ஜ.க. கொண்டாடி வருகிறது. அதன்படி துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்,

புத்தகத்துக்காக அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியதை அரசியலாக்க வேண்டாம். அவர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் அல்ல. தமிழக மக்களின் அன்பை பெற்றவர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவபடுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story