மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழிப்பறி


மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழிப்பறி
x
தினத்தந்தி 20 April 2022 11:06 PM IST (Updated: 20 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர்.

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 80-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அதில் சில மீனவர்கள் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ஃபைபர் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். 

அந்த படகுகளில் இருந்த 20 கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டியும், மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கியும் உள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த மீன்பிடி வலை, திசைகாட்டும் கருவி, 3 செல்போன்கள், டீசல், பேட்டரி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மீனவர்கள் அளித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story