தாலிக்கு தங்கம் திட்டம்; குறைபாடு இருந்ததால் மாற்றியமைக்கப்பட்டது - முதல்-அமைச்சர் விளக்கம்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் குறைபாடு இருந்ததால், அதனை மாற்றியமைத்தாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கையின் மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு முதல் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிவித்தார். அப்போது எழுந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காரணமாக யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என்றார். இத்திட்டம் மோசமான திட்டம் அல்ல என்றும், அதனை தொடர் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கம் வழங்கும் திட்டத்தை மோசம் என கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும் திட்டம் முறையான நபர்களுக்கு சென்று சேரவில்லை என்றும் அதன் காரணமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
Related Tags :
Next Story