தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 April 2022 10:59 AM IST (Updated: 22 April 2022 10:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. 

இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதாவது தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story