தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2022 12:16 AM IST (Updated: 23 April 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு, கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேசிய குடும்ப நல 5-வது ஆய்வு (2019-20) முடிவுகளின் படி, நாட்டிலேயே குடும்ப வன்முறை நிகழ்வுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது எனத் தெரிகிறது.

குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ள பெண்களில் 81 சதவீதம் பேர் உதவி எதையும் தேடுவதில்லை. நாட்டிலேயே தமிழகத்தில் தான், உதவியை நாடாத பெண்களின் விகிதம் அதிகம் என்பது கவலையுடன் பார்க்க வேண்டிய விபரமாகும். ஏற்கனவே நடந்த குடும்ப நல ஆய்விலும் இதே நிலைமைதான் தெரிய வந்தது.

எனவே, குடும்ப வன்முறை ஒரு குற்றச் செயல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், குடும்ப வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story