மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகை


மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 23 April 2022 5:15 AM IST (Updated: 23 April 2022 5:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) மையம் சென்றடைகிறார். இரவு அங்கு அமித்ஷா தங்குகிறார். 24-ந்தேதி (நாளை) காலை 8.35 மணிக்கு ஆவடி சி.ஆர்.பி.எப். மையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு புதுச்சேரி செல்கிறார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 6.15 மணிக்கு அமித்ஷா சென்னை வருகிறார். பின்னர் மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

Next Story