மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டி தொழிலாளி பலி
போடியில், அனுமதியின்றி நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில், மாடு முட்டி வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி பலியானார்.
தேனி,
தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இரட்டை மாட்டு வண்டி பந்தயம், தேனி மாவட்டம் போடியில் நேற்று நடந்தது.
பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியை பார்ப்பதற்கு போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் திரளாக கூடி இருந்தனர். பந்தயத்தில் காளைகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு ஓடின.
மாடு முட்டி தொழிலாளி சாவு
அப்போது, பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்த போடி புதூரை சேர்ந்த ராமர்(வயது 40) என்ற தொழிலாளியை, பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருந்த மாடு, கொம்பால் முட்டி தூக்கி வீசியது.
இதில் அவருக்கு மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக, போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அரசு அனுமதியின்றி, மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story