"தமிழகத்தில் செயற்கை மின் தட்டுப்பாடு" - ஜெயக்குமார் குற்றச்சாட்டு


தமிழகத்தில் செயற்கை மின் தட்டுப்பாடு - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 April 2022 9:19 PM IST (Updated: 25 April 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு மத்திய அரசின் மீது திமுக பழிபோடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ்நாட்டில் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின்கொள்முதல் ஒப்பந்தம் மூலம் பலகோடி ரூபாய் வரை முறைகேடு செய்வதற்குரிய முத்தாய்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. 2113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. ஒரு செயற்கையாக மின்வெட்டு ஏற்படுத்தி மத்திய அரசு மீது பழிபோடுகிறது.

பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி அதன்மூலம் ஆதாயம் பெறுகின்ற நடவடிக்கைக்கு முத்தாய்ப்பாக தான் இந்த மின்வெட்டு இருக்கிறது. இந்த பாவம் சும்மா விடாது என்று கூறினார்.

Next Story