நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் கவர்னரிடம் இல்லை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 25 April 2022 10:11 PM IST (Updated: 25 April 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

கவர்னரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை, பெரியார் திடலில் தி.க மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கருப்பையும், சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. திராவிட சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பேசிய அவர், மக்களை விட கவர்னர்கள் அதிகாரம் மிக்கவர்களா? இல்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால், மாற்றிக்கொள்ள வேண்டும்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடிய அதிகாரம் கவர்னரிடம் இல்லை. கவர்னரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே. தபால்துறை ஊழியரின் பணியைக் கூட செய்ய மறுப்பது கவர்னருக்கு அழகல்ல என்று கூறினார்.

Next Story