தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 April 2022 2:13 PM IST (Updated: 26 April 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா, மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story