கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு - பாஜக, பாமக வரவேற்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 April 2022 5:32 PM IST (Updated: 26 April 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாஜக, பாமக கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருப்பதற்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.


Next Story