ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில், தும்மசின்னம்பட்டி பகுதியில் எல்லை கற்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமசாமிபட்டியை சேர்ந்த தங்கமணி (45) என்பவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தங்கமணி பெயரை நீக்க எம்.ரெட்டியபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாகவும், மேலும் நிபந்தனை ஜாமீனில் அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் இருக்க சப்- இன்ஸ்பெக்டர் ராமநாதன் மீண்டும் தங்கமணியிடம் ரூ.10 ஆயிரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்கமணி, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதனிடம், தங்கமணி கொடுத்தபோது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ராமநாதனை பிடித்து கைது செய்தனர்.

Related Tags :
Next Story