ராஜபாளையம் தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் தீ விபத்து....!
ராஜபாளையம் தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தனியார் கட்டடத்தின் கீழ் பகுதியில் மதுரையை தலைமையிடமாக கொண்ட தனியார் ரத்த பரிசோதனை அலுவலகமும், மாடியில் ராஜபாளையத்தை சேர்ந்த வியாஷ் என்பவர் கன்ஸ்ட்ரக்சன் அலுவலகமும் நடத்தி வந்தார்.
பரிசோதனை அலுவலகத்தில் இன்று காலை சுமார் 4 மணியளவில் இன்வெர்ட்டர் பேட்டரியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை அடுத்து கட்டடத்தில் தீ பற்றி தீ எரிய தொடங்கியது.
இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்க தகவல் அளித்தனர். மீட்பு குழுவினர் வருவதற்குள் கட்டடத்தின் மொத்த பகுதியிலும் தீ பரவியது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த கணிணி, லேப்டாப், ரத்தப் பரிசோதனை எந்திரம், நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story