இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் ராமேஸ்வரம் வருகை..!
இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் கடந்த இதுவரை 15-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 77 பேர் ராமேஸ்வரம் முகாமில் அகதிகளாக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொண்டி கடல் வழியாக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் சீலன் (வயது 27) மற்றும் எட்வர்ட் மகன் அருள்ராஜ் (34) ஆகிய 2 பேர் அதிகாலை 3.30 மணி அளவில் சிறிய வகை விசைப்படகில் மூலம் தொண்டி வந்தடைந்து உள்ளனர்.
அணிந்திருந்த ஆடைகளுடன் குயின்சி ராணி என்று பெயரிடப்பட்ட படகில் வந்த இருவரும் படகுக்கான ஆவணங்கள் மட்டுமே கொண்டுவந்துள்ளனர்.
கடல்வழியாக வரும் போது அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் இது எந்த ஊர் அருகே போலீஸ் நிலையம் உள்ளதா என்ற விபரங்களை கேட்டறிந்து தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அப்போது கடலோர காவல் படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், அய்யனார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகியோர் அகதிள் இருவரையும் மீட்டு தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.
மேலும் அவர்களை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story