பள்ளி வளாகத்தில் ஆக்ரோஷமாக தாக்கி கொண்ட மாணவர்கள்....!
வந்தவாசி அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த 25-ம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் திரைபடங்களில் வரும் சண்டைக் காட்சி போன்று ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
இதை சகமாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சண்டையில் ஈடுபட்ட 2 மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளியில் விசாரணை நடத்தினார். பின்னர், மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு கண்டித்து அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story