திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - பயணிகள் அவதி...!


திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - பயணிகள் அவதி...!
x
தினத்தந்தி 29 April 2022 10:00 AM IST (Updated: 29 April 2022 9:52 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

கேகே நகர்,

திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை  போன்ற பல்வேறு  நாடுகளுக்கு விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு 1.45 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 120 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது.  அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.


இந்த விமானம் புறப்படும் நேரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.  இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 



Next Story