கவர்னர் வருகை: நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்துக்கு தடை
கவர்னர் வருகையால் நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை முதம் மதியம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி,
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களுடன் ஊட்டியில் கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் மாநாடு நடத்தினார். கடந்த 25 மற்றும் 26-ம் தேதி இந்த மாநாடு நடைபெற்றது.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவி சாலை மார்க்கமாக நாளை உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்ல உள்ளார். இதனை தொடர்ந்து நீலகிரி, கோத்தகிரி சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கபடுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதனால், அனைத்து வாகனங்களும் குன்னூர் பர்லியார் வழியாக உதகை - மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story