அடுத்த மாதம் ஓய்வுபெறும் ஐகோர்ட்டு நீதிபதிகள் 4 பேருக்கு பிரிவுபசார விழா
அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள 4 நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டில் பிரிவுபசார விழா நேற்று நடந்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாக உள்ள கே.கல்யாணசுந்தரம், வி.பாரதிதாசன், எம்.கோவிந்தராஜ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடுத்த மாதம் பல்வேறு தேதிகளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாதம் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை என்பதால், இவர்கள் அனைவருக்கும் பிரிவுபசார விழா நேற்று நடந்தது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி டெல்லியில் நடைபெறும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாட்டுக்கு சென்றுள்ளதால், இந்த விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள், மணிப்பூர் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.சுதாகர், ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒரே காரில்...
ஓய்வுபெறவுள்ள நீதிபதிகள் 4 பேரையும் வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசினார். அதற்கு நன்றி தெரிவித்து நீதிபதிகள் ஒவ்வொருவராக பேசினர். நீதிபதி கே.கல்யாணசுந்தரம் தனது நன்றியுரையை தமிழில் ஆற்றினார். அப்போது அவர், ‘எனக்கு ஐகோர்ட்டு நீதிபதி பதவி கிடைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் உள்ளிட்ட பல நீதிபதிகள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
நீதிபதி வி.பாரதிதாசன் பேசும்போது, ‘வக்கீலாகவும், நீதிபதியாகவும் 32 ஆண்டுகள் ஐகோர்ட்டில் பணியாற்றியுள்ளேன். பதவிக்காலத்தில் நான், தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உள்ள எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஒரே காரில் வீட்டில் இருந்து ஐகோர்ட்டுக்கு வருவோம். அதனால், எங்களை ‘ஷேர் ஆட்டோ' நீதிபதிகள் என்றுதான் அழைப்பார்கள். ஜூனியர் வக்கீல்கள் தங்கள் தொழிலை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக ஒருநாள் உயர்ந்த இடத்துக்கு வருவீர்கள்’ என்றார்.
முதல் பட்டதாரி
நீதிபதி எம்.கோவிந்தராஜ், ‘என்னை நீதிபதியாக பரிந்துரை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி உள்ளிடோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
அதேபோல நீதிபதி ஆர்.பொங்கியப்பன் பேசும்போது, ‘என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. எனக்கு கல்வி தந்த பெற்றோருக்கும், எனது சீனியர் வக்கீல் ஈரோட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Related Tags :
Next Story