செங்குட்டுவன் உள்பட 3 மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்கள் நீக்கம்


செங்குட்டுவன் உள்பட 3 மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்கள் நீக்கம்
x
தினத்தந்தி 30 April 2022 5:17 AM IST (Updated: 30 April 2022 5:17 AM IST)
t-max-icont-min-icon

செங்குட்டுவன் உள்பட 3 மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்கள் நீக்கம் வைகோ அதிரடி அறிவிப்பு.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க.வின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்ட செயலாளர்), டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), ஆர்.எம்.சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு உள்பட கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ளும். அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின்படி இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story