தெற்கு கடலோர, உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தெற்கு தமிழக கடலோர மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அதேநேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழையும் பதிவாகி வருகிறது.
சூரியன் கோர தாண்டவம் ஆடுவதால் பகல் நேரங்களில் அனல் காற்று கடுமையாக வீசி வருகிறது. வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வெப்பசலனம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 3-ந்தேதி (இன்று) தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4-ந்தேதி (நாளை) முதல் 6-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 4 மற்றும் 5-ந்தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும், 6-ந்தேதியன்று சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே அந்தந்த நாட்களில், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருந்துறையில் 13 செ.மீ. மழை
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சோழவந்தானில் 6 செ.மீ., பொள்ளாச்சியில் 4 செ.மீ., மேட்டுப்பட்டி, பவானி, ஓசூர், கேட்டி, காஞ்சீபுரம், மேட்டூரில் தலா 3 செ.மீ., ராயக்கோட்டை, சூளகிரி, சேந்தமங்கலம், வால்பாறை, அரக்கோணம், சின்னக்கல்லார், காவேரிப்பாக்கத்தில் தலா 2 செ.மீ., பரூர், திண்டிவனம், எட்டயபுரம், ஊத்துக்குளி, குமாரபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோபிசெட்டிப்பாளையம், வாடிப்பட்டி, திருவாலங்காடு, வேடசந்தூர், வெம்பாக்கத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Tags :
Next Story