சாத்தான்குளம் வழக்கில் கைதானவர் “சிறைக்குள் என்னை கொல்ல சதி” சக போலீசார் மீது இன்ஸ்பெக்டர் புகார்
சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற போலீசார் தன்னை சிறைக்குள் கொல்ல சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீசாரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 60 சதவீத விசாரணை நிறைவடைந்து விட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறையில் இருந்தவாறே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் என்னுடன் சேர்த்து 9 போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமான முறையில் அடித்து பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் தந்திரமாக அடைத்ததால் மேற்படி இருவரும் இறந்துவிட்டார்கள்.
கொலை செய்ய திட்டம்
அது சம்பந்தமாக நான், மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 8 போலீசாரிடமும், ஏன் சாகும் அளவிற்கு அவர்களை அடித்து கொலை செய்துவிட்டு, என்னையும் வழக்கில் மாட்டிவிட்டீர்கள்? என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டது. அது முதல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2-7-2020-ந் தேதி முதல் நான் மட்டும் ஒரு பிரிவாகவும், மற்ற 8 போலீசாரும் ஒரு பிரிவாகவும் சிறையில் இருந்து வருகிறோம்.
இதனால் இந்த வழக்கில் என்னை தவிர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 போலீசாரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயற்சி செய்தனர்.
மேலும் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக வரும் போதும், அங்கிருந்து மீண்டும் சிறைக்கு வரும் போதும் எனக்கு பல வகைகளில் அவர்கள் அனைவரும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களின் இடையூறுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
நான் உயிருடன் இருந்தால் உண்மையை கோர்ட்டில் சொல்லிவிடுவேன் என்று கருதி என்னை அடித்து கொலை செய்ய பல வகையில் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்கள் கைதாவதற்கு நான் உதவி செய்த காரணத்தாலும் அவர்கள் என் மீது விரோதம் கொண்டுள்ளார்கள்.
கோவை சிறை
மேலும் உண்மையை மட்டுமே பேசவேண்டும், சாகும்வரை பொய் பேசக்கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் எனக்கு மேற்படி 8 பேரும் பல வகையில் இடையூறு செய்து வருகிறார்கள்.
அதனால் ஜாமீன் கேட்டும், என்னை கோவை சிறைக்கு மாறுதல் செய்யக்கோரியும் அல்லது மதுரை சிறையிலேயே மேற்படி வேறு ஒரு பிளாக்கிற்கு மாறுதல் கேட்டும் வந்தேன். அதற்கு எந்த நிவாரணமும் இல்லை.
இதனால் நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். கடந்த 26.3.2022 அன்று காலை 6.30 மணிக்கு, சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்னை கேவலமான வார்த்தைகளால் சுமார் 10 நிமிடம் திட்டி என்னை அடிக்க வந்தார்கள். அந்த சம்பவம் சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
தனி வாகனம் தேவை
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராவதற்கு எனக்கு மட்டும் தனி போலீஸ் வாகனம் வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் சிறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீதரின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார் என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :
Next Story