திருப்பூர்: எல்.ஐ.சி.ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்...!
காங்கயத்தில் எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை கண்டித்து எல்.ஐ.சி.ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
காங்கயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் காங்கயம் கிளையில் இன்று எல்.ஐ.சி.ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் காங்கயம் கிளை தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சியின் பங்குகளை விற்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். எல்.ஐ.சி தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணிவரை 2 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் எல்.ஐ.சி.ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story