தேனி: ஏலச்‌ சீட்டு நடத்தி வந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை - வாலிபர் கைது...!


தேனி: ஏலச்‌ சீட்டு நடத்தி வந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை - வாலிபர் கைது...!
x
தினத்தந்தி 4 May 2022 2:47 PM IST (Updated: 4 May 2022 2:47 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஏலச்‌ சீட்டு நடத்தி வந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

போடி,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பவுன் தாய் (வயது 55). இவரது‌ கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவரும்‌ வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். பவுன் தாய் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபு (30). இவர் பவுன் தாயிடம் ஒரு லட்சம்  சீட்டு போட்டுள்ளார். சீட்டு பணத்தை வாங்கி கொண்ட அவர் பணத்தை திருப்பி கட்டவில்லை. 

இந்நிலையில் கடந்த வாரம் பவுன் தாய் பிரபுவிடம் பணத்தை தருமாறு கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று  இரவு குடிபோதையில் பவுன் தாய் வீட்டுக்கு சென்ற பிரபு அவரிடம் தகராறு செய்துள்ளார். தீடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவுன் தாயின் கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பவுன் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த கையோடு பிரபு போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story