தஞ்சை: அதிராம்பட்டினம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி...!
அதிராம்பட்டினம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. மேலும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கி இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மிதமான வெயில் அடித்த நிலையில் மதியம் 4 மணிக்கு மேல் திடீரென வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.
கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடி மின்னலுடன் பலத்த மழையாக சுமார் 1 மணி நேரம் வரை நீடித்து.
இதனால் பஸ் நிலையம், கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலோர காவல் நிலையம், மற்றும் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நீடித்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story