கலர் பொடி கலந்து சிக்கன் விற்பனை; அதிரடி ரெய்டு - அள்ளி சென்ற அதிகாரிகள்
சென்னை வளசரவாக்கத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 20 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை வளசரவாக்கத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 20 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை அடுத்த வளசரவாக்கம், ராமாபுரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வளசரவாக்கம் பகுதியில் உள்ள துரித உணவு கடையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட ரசாயன பொடிகள் கலந்து சிக்கன் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய புகாரில் 5 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story