சென்னை: ஆயுதப்படை காவலர் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:
சிவகங்கை மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (30). இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் கடந்த 2013ம் ஆண்டில் சேர்ந்து வேலை செய்து வந்தார். இவருக்கு ஸ்வேதா என்பவருடன் 6 மாதத்திற்கு முன் திருமணம் நடந்து தற்போது ஆவடியில் உள்ள பூபொழில் நகரில் தங்கி வந்துள்ளார்.
இவருக்கு அம்பத்தூரில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் இவருக்கு பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் சரவணகுமார் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் சரவணக்குமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story