லுலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட பாஜக அனுமதிக்காது - அண்ணாமலை
தமிழகத்தில் லுலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட பாஜக அனுமதிக்காது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகத்தில் லுலு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அண்ணாமலை வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் லுலு மார்ட் ஒரு செங்கலை வைப்பதற்கு கூட பாஜக அனுமதி கொடுக்காது.
நாங்கள் எந்த நிறுவனத்திற்கும் எதிரான கட்சி கிடையாது. ஆனால் லுலு நிறுவனத்தால் சிறு வணிகர்கள் காணாமல் சென்று விடுவர். லுலு நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற துபாயில் கூட அந்த நிறுவனம் வேண்டாமென்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
லுலு நிறுவனம் கொண்டுள்ள வியாபார மாதிரி, சிறு வியாபாரிகளை அழித்து பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டும் நோக்கில் தமிழகத்திற்குள் நுழையும்போது அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story