பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து விமர்சனம்: தமிழக கவர்னருக்கு வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. மாணவர் இயக்கங்கள் போல் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகச் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது’, என்று குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு வாய்ந்த கவர்னர் இப்படி, ஒரு சிறுபான்மை அமைப்பின் மீது வலிந்து குற்றம் சாட்டுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. சட்டத்துக்கு உட்பட்டு இயங்கி வருகிற அமைப்பு. கொரோனா காலத்தில் உயிரிழந்த மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மத வேறுபாடு கருதாமல் துணிந்து முன் வந்தவர்கள் அந்த அமைப்பின் இளைஞர்கள் தான். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இளைஞர்கள்தான் என்பதை மக்கள் அறிவார்கள். சென்னை பெருமழை வெள்ளத்தில் மக்கள் தவித்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டியது அந்த அமைப்புதான். எனவே கவர்னர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக்கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பது, மாநில அரசின் அதிகாரம். அதில் கவர்னர் தலையிட முயற்சிப்பது அத்துமீறல் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story