"பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாஜக துணை நிற்கும்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 8 May 2022 10:32 PM IST (Updated: 8 May 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு பாஜக துணை நிற்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் தமிழக பாஜக என்றும் மக்களோடு இருக்கும் என்று கூறியுள்ளார். 

மேலும் இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும் என்றும் சிஷ்யர்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story