"அதிமுகவுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன்" - சசிகலா
அதிமுகவுக்கு நிச்சயமாக நான் தலைமை ஏற்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் சிறப்பு பூஜைகளில் சசிகலா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் நிச்சயம் நான் தலைமை ஏற்பேன் என்றும் கூறினார்.
புதிய இயக்கும் தொடங்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் தம்மோடு இருப்பதாகவும் சசிகலா கூறினார். கோவில்களில் அரசியல் செய்ய வேண்டாமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Related Tags :
Next Story