நாமக்கல்: ஓடும் அரசு பஸ்சில் 5 பவுன் நகை கொள்ளை- 3 பெண்கள் கைது...!


நாமக்கல்: ஓடும் அரசு பஸ்சில் 5 பவுன் நகை கொள்ளை- 3 பெண்கள் கைது...!
x
தினத்தந்தி 9 May 2022 10:19 AM IST (Updated: 9 May 2022 10:19 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே ஓடும் அரசு பஸ்சில் 5 பவுன் நகையை கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர்,

சேலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சென்ற பெண் பயணி ஒருவரிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க நகையை திருடிய 3 பெண்களை பொதுமக்கள் பிடித்து பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் 3 பெண்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பஸ் பெண் ஒருவர் தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே வந்தபோது அந்த பெண் பயணி தனது பேக்கில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். 


இந்த நிலையில் அரசு பஸ் இருந்து மோகனூர் சாலையில் இறங்கிய 3 பெண்கள் மீது சந்தேகம் அடைந்த  பஸ்  கண்டக்டர் பஸ்சை நிறுத்தி மோகனூர் சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று  பெண்களை நோக்கி ஓடிச்சென்றுள்ளார்.

இதை பார்த்த அந்த பெண்கள் கையில் இருந்த தங்க நகைகளை கீழே போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் நின்றுகொண்டு இருந்துள்ளனர். கீழே போட்ட அந்த நகையை கண்டக்டர் எடுத்துக் கொண்டு அங்கிருந்த பொதுமக்களை அழைத்து பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம்  இந்த 3 பெண்களும் நகை திருடியது குறித்து கூறியுள்ளார்.

பின்னர் 3 பெண்களிடமும் இருந்து மீட்கப்பட்ட 5 பவுன் தங்க நகைகளை பஸ்சில் பயணம் செய்த அந்த பெண்ணிடம் கண்டக்டர் ஒப்படைத்தார்.  

பின்னர்,  பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகையை திருடிய 3 பெண்களையும் பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து அந்த 3  பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





Next Story