விசுவாசம்: மயிலாப்பூர் தொழிலதிபர் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் பின்னால் ஓடிய செல்ல நாய்...!
மயிலாப்பூர் தொழில் அதிபரின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் பின்னால் செல்ல நாய் ஓடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்,
சென்னை மயிலாப்பூர் தொழில் அதிபரை மனைவியுடன் கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொலையாளிகள் புதைத்தனர்.
நேற்று மாலை அவர்களது உடலை தோண்டி எடுப்பதற்காக அப்பகுதி மயான ஊழியர்களை போலீசார் வரவழைத்து தோண்ட துவங்கினர். அப்போது பண்ணை வீட்டில் உள்ள நாட்டு நாய் ஒன்று ஊழையிட்டு அருகிலேயே நின்றது. போலீசார், தடயவியல் நிபுணர்கள் துரத்தியும் அங்கிருந்து போகவில்லை.
ஸ்ரீகாந்த்- அனுராதா இருவரும் பண்ணை வீட்டுக்கு வரும்போது அதற்கு உணவளிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றும் வரை அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மணலில் சிக்கியதும் ஓடிவந்து ஆம்புலன்ஸ் முன் நின்றது அனைவரும் துரத்தியதால் சோகத்துடன் சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story