பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இருவர் தொடர்பில் உள்ளனர் தூக்கிவிடுவோம்...! குண்டு போடும் தி.மு.க எம்.பி...!


பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இருவர் தொடர்பில் உள்ளனர் தூக்கிவிடுவோம்...! குண்டு போடும் தி.மு.க எம்.பி...!
x
தினத்தந்தி 9 May 2022 3:36 PM IST (Updated: 9 May 2022 3:36 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இருவர் தி.மு.க.வுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கட்சித் தலைமை அனுமதியளித்தால் இருவரையும் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: 

தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவருடைய மகன் சூர்யா சிவா. சூர்யா சிவா தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல் பரவியது.

இந்தநிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சூர்யா சிவா நேற்று வந்தார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அண்ணாமலை பா.ஜ.க.வின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு வரும் கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ''திமுகவில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதைக் கொண்டாடும் தமிழக பாஜகவினரே உங்களுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளானர். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Next Story